2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அருணாலச்சலப் பிரதேசத்துக்கான மோடியின் விஜயத்துக்கு சீனா எதிர்ப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று  (09) விஜயம் செய்தமை தொடர்பில், தன்னுடைய எதிர்ப்பை, சீனா வெளிப்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சீனாவும் உரிமை கோருகின்ற நிலையிலேயே, இவ்வெதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய - சீன எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இம்மாநிலத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கிவைத்திருந்தார்.

எனினும், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட சீன வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர், 'அருணாச்சலப் பிரதேசம் என்றழைக்கப்படும் இந்தப் பகுதியை, சீன அரசாங்கம் எப்போதுமே அங்கிகரித்திருந்ததில்லை. அப்பகுதிக்கான இந்தியத் தலைவரின் விஜயத்துக்கு நாங்கள், முற்றிலும் எதிராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

அத்தோடு, எல்லை தொடர்பாகக் காணப்படும் முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென, இந்தியத் தரப்பை வலியுறுத்துவதாகவும், அவரின் அறிக்கை தெரிவித்தது.

அருணாச்சலப் பிரதேசம் தொடர்பான முரண்பாடு, பல தசாப்தங்களைச் சேர்ந்தது. இம்மாநிலம் தொடர்பாக, 1962ஆம் ஆண்டில் போரொன்று ஏற்பட்டிருந்ததோடு, அப்பகுதியைச் சீனப் படைகள் கைப்பற்றியிருந்தன. அது தொடர்பான முரண்பாடு, இன்றுவரை தொடர்கிறது. தனது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக, அருணாச்சலப் பிரதேசம் முழுவதையும் இந்தியா கருதும் அதேநேரத்தில், அப்பகுதியில் சுமார் 90,000 சதுரகிலோமீற்றர் பகுதியை, சீனாவின் அங்கமாக அந்நாடு கருதுகிறது.

இப்பிரச்சினைகளின் முரண்பாட்டை மேலும் வெளிப்படுத்துவதைப் போல், பூட்டானின் டோக்லம் பகுதியில், சீன இராணுவத்தால் இராணுவத் தேவைகளுக்கான வீதிகளை அமைக்கும் பணிகள் 2017ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போது, அதற்கெதிராக, தமது நாட்டுப் படைகளை அப்பகுதிக்கு இந்தியா அனுப்பியிருந்தது. இதனால், போர் ஏற்படும் ஆபத்து அங்கு ஏற்பட்டிருந்தமை ஞாபகப்படுத்தத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X