2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அறுவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 மே 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடான் தலைநகர் கார்டூமில், சூடானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆறு பேரும், இராணுவ மேஜரொருவரும் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சூடானைக் கொண்டு நடத்தக் கூடிய இடைக்கால அதிகாரிகள் தொடர்பாக திருப்புமுனை இணக்கமொன்றை ஆர்ப்பாட்டக்காரத் தலைவர்களும், ஆளும் ஜெனரல்களும் அடைந்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சூடானினின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிரின் ஆட்சியைக் கடந்த மாதம் முடிவுக்கு கொண்டு வர வழிவகுத்த, சூடானிய அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில், ஆர்ப்பாட்டங்களைக் கொன்றதாக முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்ததைத் தொடர்ந்தே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிர் பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இராணுவ ஜெனரல்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கார்டூமிலுள்ள இராணுவத் தலைமையகத்துக்கு வெளியே வாரக்கணக்காக கூடியுள்ள ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவரும், மேஜரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அடையாளங்காணப்படாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மூன்று படைவீரர்களும், சில ஆர்ப்பாட்டக்காரர்களும், பொதுமக்களும் காயமடைந்திருந்ததாகவும் ஆளும் இராணுவச் சபை தெரிவித்திருந்தது.

இதேவேளை, மேலும் நான்கு ஆர்ப்பாட்டக்கார்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் செயற்குழுவொன்று தெரிவித்தபோதும், அவர்கள் இராணுவத் தலைமையகத்துக்கு வெளியேயான ஆர்ப்பாட்டத்திலேயே கொல்லப்பட்டிருந்தார்களா எனக் குறிப்பிட்டிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X