2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அலெப்போவில் குறைந்தது 61 பேர் பலி

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், எதிரணிகளால் கட்டுப்படுத்தப்படும் நகரொன்றின் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களின் விளைவாக, குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டனர் எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

சிரியாவின் அலெப்போ மாகாணத்திலுள்ள நகரான அட்டரெப்பில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாலேயே, இவர்கள் உயிரிழந்தனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்று (14) தெரிவித்தது. அப்பகுதியில், 3 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என அறிவிக்கப்படுகிறது.

இதில் குறிப்பாக, அப்பகுதியில் மோதல் தவிர்ப்பு வலயம் போன்று காணப்படும் நிலையிலேயே, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர், காயம் காரணமாக உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்தது. அவர்களில் 5 சிறுவர்களும் 3 பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்” என, கண்காணிப்பகம் குறிப்பிட்டது.

சிரிய அரசாங்கத்தின் தோழமை நாடுகளான ரஷ்யா, ஈரான் ஆகியனவற்றுக்கும், எதிரணிகளுக்கு ஆதரவு வழங்கும் துருக்கிக்கும் இடையில், இவ்வாண்டு ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தின் கீழேயே, இப்பகுதியில் மோதல் தவிர்ப்பு வலயம் உருவாக்கப்பட்டிருந்தது.

அலெப்போ நகரத்தை, சிரிய அரசாங்கம், கடந்தாண்டு கைப்பற்றியிருந்த போதிலும், அலெப்பொ மாகாணத்தின் கணிசமானளவு பகுதியை, எதிரணிப் படைகளே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X