2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இந்தியாவின் இராணுவத் தலையீடு வேண்டும்’

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைத் தொடர்ந்து, அங்கு இராணுவ ரீதியான தலையீடு மேற்கொள்ளப்பட வேண்டுமென, மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் கோரியுள்ளார்.

மாலைதீவுகளில், ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியான நஷீட், தற்போதைய ஆட்சிக் காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். மருத்துவத் தேவைகளுக்காக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட அவர், ஐக்கிய இராச்சியத்தில் அகதி அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவர் தற்போது, கொழும்பில் காணப்படுகிறார்.

நஷீட் உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்கும் உத்தரவைத் தொடர்ந்தே, மாலைதீவுகளில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தனது டுவிட்டரில் நேற்று (06) கருத்துத் தெரிவித்த போது, இராணுவத் தலையீட்டுக்கு அவர் கோரினார்.

மாலைதீவுகளின் மக்கள் சார்பான கோரிக்கையெனத் தெரிவித்த அவர், “இராணுவப் பின்புலத்துடன், தூதுவரொருவரை இந்தியா அனுப்ப வேண்டும்” என்று கோரியதோடு, முன்னாள் ஜனாதிபதி கயூம் உள்ளிட்ட அரசியல் கைதிகளையும் நீதியரசர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரியதோடு, அங்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்று கோரினார்.

அதேபோன்று, மாலைதீவுகளின் அரசாங்கத் தலைமைகளுக்கு, ஐக்கிய அமெரிக்கா அளிக்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X