2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறந்தவர்கள் நல்லடக்கம்; மேலுமிருவர் சுட்டுக்கொலை

Editorial   / 2018 மே 17 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேல் - காஸா எல்லையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் மீது, இஸ்‌ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாகக் கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்குகள், நேற்று முன்தினம் (16) இடம்பெற்று, சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இஸ்‌ரேலுக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தை, டெல் அவிவ்விலிருந்து ஜெருசலேத்துக்கு மாற்றும் தினமான 14ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறியதைத் தொடர்ந்து, 60 பலஸ்தீனர்கள், இஸ்‌ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இவர்களின் மரணச் சடங்குகளே, பெரும் கவலைக்கு மத்தியில் நேற்று முன்தினம் இடம்பெற்றன. இதன் காரணமாக, நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், பெருமளவிலானோர் கலந்துகொண்டிருக்கவில்லை. சுமார் 4,000 பேர் வரையிலானே, போராட்டங்களில் கலந்துகொண்டனர்.

எனினும், அவ்வாறு கலந்துகொண்டோர் மீது, இஸ்‌ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்படுகிறது.

பலஸ்தீன மருத்துவ அதிகாரிகளின் தகவலின்படி, மார்ச் 30ஆம் திகதி ஆரம்பித்த போராட்டங்களின் பின்னர், இதுவரை 107 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 11,000 பேர் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் சுமார் 3,500 பேர், துப்பாக்கிச் சூடுகளில் சிக்கிக் காயமடைந்தனர்.

இதேவேளை, இஸ்‌ரேல் - காஸா எல்லையில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 60 பேரில், குறைந்தது 24 பேர், “ஆவணப்படுத்தப்பட்ட பயங்கரவாதப் பின்னணியைக் கொண்ட பயங்கரவாதிகள்” என, இஸ்‌ரேல் இராணுவம் தெரிவித்ததோடு, அவர்களில் அநேகமானோர், ஹமாஸ் ஆயுதக்குழுவின் இரகசியச் செயற்பாட்டாளர்கள் எனவும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .