2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஈரான் தடைகளை ஐ. அமெரிக்கா நீக்காது’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானானது 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்ததின் கடப்பாடுகளுக்குத் திரும்பும் வரையில் அந்நாடு மீது ஐக்கிய அமெரிக்கா தடைகளை நீக்காதென ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்துக்கு ஈரானை மீளக் கொண்டு வரும் வகையில் தடைகளை ஐ. அமெரிக்கா நீக்குமா என சி.பி.எஸ் நியூஸ் நேர்காணலொன்றில் வினவப்பட்டபோது இல்லை என ஜனாதிபதி பைடன் பதிலளித்துள்ளார். நேர்காணலின் பகுதியொன்று இணையத்தில் நேற்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈரான் அணு ஒப்பந்தத்தின் கடப்பாடுகளுக்குத் திரும்ப முன்னர், ஐக்கிய அமெரிக்கா ஒப்பந்தத்தின் கடப்பாடுகளுக்கு முதலில் திரும்ப வேண்டும் என ஈரானின் அதியுயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி நேற்று தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .