2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ. அமெரிக்காவுடனா பேச்சுக்கள்: தடையை புதுப்பிக்கும் அயோத்துல்லா காமேனி

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சுக்களுக்கான தனது தடையை ஈரான் நீக்காது என ஈரானின் அதியுயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி நேற்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்ட 40 ஆண்டுகள் நினைவுக்கு முன்பாக ஈரானையும், ஐக்கிய அமெரிக்காவையும் தணிக்க முடியாத வெறுப்புள்ள எதிரிகள் என அதியுயர் தலைவர் காமேனி வர்ணித்துள்ளார்.

“அமெரிக்காவின் அரசியல் ஊடுருவலை முடக்குவதற்கான ஒரு வழி, அமெரிக்காவுடனான எப்பேச்சுக்களையும் தடை செய்வது. இது, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஈரான் பணியாது எனப் பொருள்படுகிறது” என அதியுயர் தலைவர் காமேனி தெரிவித்ததாக ஈரானிய அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமிடையே பேச்சுக்களை ஏற்படுத்த முயன்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனையும் அதியுயர் தலைவர் காமேனி சாடியுள்ளார்.

ஈரான் மற்றும் உலக நாடுகளுடனான 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிட்டதை அடுத்து, ஈரானுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்குமான உறவுகள் நெருக்கடியொன்றை கடந்தாண்டு அடைந்திருந்தன.

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளை இடைநிறுத்துவதை இலக்காக மீண்டும் தடைகளை ஐக்கிய அமெரிக்கா அமுல்படுத்தியிருக்கிற நிலையில், இம்மாதம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .