2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் தோல்வி அறிவிப்பு அடுத்த வாரம்?

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட முழுமையான நிலப்பரப்புகளும், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த வார ஆரம்பத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தெரிவித்துள்ளார்.

சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை எதிர்த்துப் போராடிய 79 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர், ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப், இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “அவர்களுடைய (ஐ.எஸ்.ஐ.எஸ்) நிலம் போய்விட்டது. இது மிகப்பெரிய ஒரு விடயம் -- அவர்களுடைய நிலம் போய்விட்டது” என, ஜனாதிபதி ட்ரம்ப், அவர்களிடம் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை எதிர்த்துச் சிரியாவில் போராடும் தமது நாட்டுப் படையினரை மீள அழைப்பதாக, ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அறிவித்தமை, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. போதிய திட்டங்களின்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்த மீள் அழைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐ.அமெரிக்க செனட்டுக்கு முன்பு அண்மையில் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்க புலனாய்வு முகவராண்மைகளின் பிரதானிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆபத்துக் காணப்படுவதாகவே தெரிவித்திருந்தனர்.

எனினும், சிரியாவிலிருந்து வெளியேறுவது தொடர்பான தனது முடிவில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், அந்த முடிவை நியாயப்படுத்தும் வகையிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் நிலக் கட்டுப்பாடு முழுவதும் இல்லாது போயுள்ளது எனத் தெரிவித்தார்.

ஐ.அமரிக்க இராணுவம், அதன் தோழமை நாடுகள், சிரிய ஜனநாயகப் படைகள் ஆகியன இணைந்து, சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் கொண்டிருந்த நிலப்பரப்பு முற்றாகக் கைப்பற்றியுள்ளன எனத் தெரிவித்த அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் “இஸ்லாமிய அரசு” கட்டுப்பாட்டில் வைத்திருந்த 100 சதவீத நிலப்பரப்பும் மீளக் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பு, அநேகமான அடுத்த வார ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .