2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஒப்பந்தமில்லாத பிரெக்சிற்றை நிராகரித்தனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஒப்பந்தமில்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்), பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று முன்தினம் நிராகரித்துள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒழுங்கில்லாமல், ஒப்பந்தமில்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கெதிரான பிரேரணைக்கு ஆதரவாக, 321-278 என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

அந்தவகையில், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பிரேரணையான, இம்மாதம் 29ஆம் திகதி ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற விரும்பவில்லை எனவும் ஆனால், ஒப்பந்தமொன்று நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஒப்பந்தமில்லாமல் வெளியேறலாம் என்ற சட்ட ரீதியான நிலையை நாடாளுமன்றத்துக்கு தெரிவித்ததுக்கு என்பதற்கு மேலால் மேற்குறித்த பிரேரணை சென்றுள்ளது.

அந்தவகையில், மேலே நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, சட்ட ரீதியாக வலுவற்றதாக இருக்கின்றபோதிலும் குறிப்பிட்டளவான அரசியல் வலிமையைக் கொண்டிருக்கின்றது. ஏனெனில், இதற்கு ஆதரவாக, பிரதம் மேயின் பழமைவாதக் கட்சி, அமைச்சரவையின் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், ஒப்பந்தமில்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை முழுமையாக நிராகரிக்க முடியாது என பிரதமர் மே வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தாம் வெளியேறுவதற்கான தாமதமொன்றை பிரித்தானியா எதிர்பார்த்தால், அது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய 27 அங்கத்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வாண்டு மே 24ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் முடிவடையக்கூடிய குறுகிய நீடிப்பையே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X