2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடும் குளிரால் ஏழு மாத குழந்தை மரணம்

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின்  மேல்தளத்தில் தனித்து விடப்பட்ட 7 மாத 

குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்த சம்பவம்கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

 -7 பாகை செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்துக்கு வீட்டின் மேல்தளத்தில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீது ரஷ்யப் பொலிஸார் வழக்கு

பதிவு செய்து விசாரணை நடத்திவருதாக ரஷ்ய ஊடகமொன்று தெரிவித்துள்ளது..

நல்ல காற்றை சுவாசிக்க வீட்டின்  மேல்தளத்தில் குழந்தையை அதன் சிறிய தள்ளுவண்டியில் பெற்றோர் அமரவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இது குறித்து அந்த பிராந்தியத்தின் சுகாதார துறை அமைச்சர் கூறுகையில் ''இங்கு நிலவும் கடும் குளிரினால் யாரையும் தனியே விடுவது ஆபத்து.

குறைந்த பட்ச வெப்பநிலையால், குழந்தைகள் விரைவில் பாதிக்கப்படுவார்கள்,

அதனால் எப்போதும் குழந்தைகள் கண்காணிக்கப்படவேண்டும் '' என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .