2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கதிரியக்க வாயு வெளியாகிறது’

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவால் அண்மையில் நடத்தப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, கதிரியக்கம் கொண்ட ஸெனன் வாயு வெளியாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், மேற்கொள்ளப்பட்ட சோதனை, வடகொரியா கூறியது போன்று, ஐதரசன் குண்டு தானா என்பதை உறுதிப்படுத்த முடியாமலிருப்பதாகவும் அந்நாடு தெரிவித்தது.

வடகொரியா, தனது 6ஆவதும் மிகவும் பெரியதுமான அணுகுண்டுச் சோதனையை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொண்டிருந்தது. அந்தச் சோதனையைத் தொடர்ந்து, அந்நாடு மீது ஐ.நா பாதுகாப்புச் சபையால் தடைகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, தென்கொரியாவின் வடகிழக்குப் பகுதியில், ஸெனன் வாயுவின் ஒரு வகையான பிரிவு, 9 தடவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல், கிழக்குக் கரையோரத்தில், 4 தடவைகள் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸெனன் வாயு என்பது, சாதாரணமாகக் காணப்படும், நிறமற்ற வாயுவாகும். ஆனால், கண்டுபிடிக்கப்பட்ட ஸெனன் வகை, கதிரியக்க இயல்புடைய சமதானி ஆகும்.

எனினும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கதிரிக்க வாயுவால், தென்கொரியாவின் சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பேதும் கிடையாது என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X