2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக்கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியமான பாதைகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிலச்சரிவுகளால் வயனட் மாவட்டம், கேரளாவின் ஏனைய பகுதிகளுடனான தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பெரும்பாலான் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுபவதுடன், அவற்றுக்கருகிலுள்ள நீர்த் தேக்கங்களும் அபாய எல்லையை நெருங்கியுள்ளன.

இடுக்கியில் ராஜபுரம், அடிமலியிலும் வயனட்டில் தாமரசேரி, குட்டியடியிலேயே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தன. இதுதவிர, கோழிக்கோட், மல்லபுரம், கண்ணூர், பாலக்கட்டிலும் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தனர்.

நீர் மட்டங்கள் உயர்ந்த நிலையில், இடமலையார் அணையின் வான்கதவுகள் திட்டமிட்டிருந்ததுக்கு மணித்தியாலங்கள் முன்பாகவே இன்று அதிகாலையிலேயே திறந்து விடப்பட்டிருந்தன. பெரியார் ஆறுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வான்கதவுகள் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே திறந்து விடப்பட்டுள்ளதால் பதற்றமடையத் தேவையில்லை என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வயனட், கோழிக்கோட்டில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ தேசிய இடர் பதிலளிப்பு படையின் பிரிவுகள் சென்றுள்ள நிலையில், இடுக்கி, வயனட், கோழிக்கோட், மலப்புரத்திலுள்ள மாவட்ட நிர்வாகங்கள் இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .