2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொபி அனானுக்குப் புகழாரங்கள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், நேற்று முன்தினம் (18) காலமான நிலையில், அவருக்கான புகழாரங்கள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கானாவைச் சேர்ந்த இராஜதந்திரியான கொபி அனான், 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, செயலாளர் நாயகமாகப் பணியாற்றியிருந்தார். அத்தோடு, உலகம் முழுவதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்காக, 2001ஆம் ஆண்டில், சமாதானத்துக்கான நொபெல் பரிசையும் அவர் வென்றிருந்தார்.

21ஆம் நூற்றாண்டில், ஐ.நாவை அவர் சிறப்பாக வழிநடத்தியிருந்தார் எனக் குறிப்பிட்ட, அவருக்குப் பின் ஐ.நா செயலாளர் நாயகமாகச் செயற்பட்ட பான் கீ மூன், சமாதானம், செழிப்பு, மனிதப் பண்பு ஆகியவற்றில் தவிர்க்க முடியாத அமைப்பாக, ஐ.நாவை அவர் மாற்றினார் என்றும் குறிப்பிட்டார்.

கோபி அனானின் பணிகளை மெச்சிய, ஐ.நாவின் தற்போதைய செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், “பல வகைகளில், கொபி அனான் தான் ஐக்கிய நாடுகள் அமைப்பு” என்று குறிப்பிட்டார்.

நொபெல் பரிசு வென்ற இன்னொருவரான, தென்னாபிரிக்காவின் முன்னாள் பேராயர் தெஸ்மன்ட் டுட்டு, கொபி அனானை, “அற்புதமான மனிதர்” என வர்ணித்தார்.

அனானின் மறைவைத் தொடர்ந்து, அவரது சொந்த நாடான கானாவில், ஒரு வார காலத்துக்குத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .