2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டை முற்றுகை முடிவுக்கு வந்தது: ஜோர்தான்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளதாக ஜோர்டானிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ஜோர்தானின் தெற்கு நகரமான கராக்கிலுள்ள கோட்டையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த கோட்டையை துப்பாக்கிதாரிகள் தக்க வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளனர்.

சிலுவைக்கால கோட்டையொன்றுக்குச் செல்ல முன்னர், கராக் நகரத்திலுள்ள பொலிஸ் இலக்குகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட தாக்குதலாளிகள் நான்கு பேர், தானியங்கி ஆயுதங்களைக் கொண்டிருந்ததாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, வெடிபொருட்கள், ஆயுதங்கள், தற்கொலை அங்கிகள் மறைவிடமொன்றிலிருந்து பாரியளவில் எடுக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், குறித்த தாக்குதலாளிகளின் அடையாளமோ அல்லது ஏதாவதொரு  ஆயுததாரிக் குழுவைச் சார்ந்தவர்களா என அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இத்தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவினரை விட பழங்குடியினரே நடத்தியிருக்க அதிக வாய்ப்பூக்கள் காணப்படுகின்றன.

தாக்குதலாளிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக பரிமாற்றத்தில், கனேடியப் பெண்மணியொருவர் உட்பட நான்கு பொதுமக்களும் ஐந்து பொலிஸ் அதிகாரிகளுமாக ஒன்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தவிர, குறைந்தது 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X