2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சந்திப்பு வேண்டுமென கிம் கெஞ்சினார்’

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான சிங்கப்பூர் சந்திப்பு நடக்க வேண்டுமென, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் கெஞ்சினார் என, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் றூடி ஜூலியானி தெரிவித்துள்ளார்.

முதலீடு சம்பந்தமான நிகழ்வொன்றில் உரையாற்றிய றூடி ஜூலியானி, இது சம்பந்தமான தகவல்களை வெளியிட்டார் என, ஐ.அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

“எங்களுடன் அணுவாயுதப் போரில் ஈடுபடப் போவதாகவும், அணுவாயுதப் போரில் எங்களைத் தோற்கடிக்கப் போவதாகவும், அவர்கள் எமக்குக் கூறினர். அந்தச் சூழ்நிலையில், சந்திப்பை நடத்தப் போவதில்லையென நாம் கூறினோம்.

“கிம் ஜொங்-உன், அவரது முழங்காலில் நின்று, அச்சந்திப்புக்காகக் கெஞ்சினார். அவ்வாறான நிலைமையில் தான், அவரை நீங்கள் வைத்திருக்க வேண்டும்” என, ஜூலியானி கூறினாரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது இக்கருத்து, சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அச்சந்திப்பிலிருந்து விலகப் போவதாக, வடகொரியா அறிவித்திருந்தது.

ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்ட்டன், லிபியா போன்று, வடகொரியாவின் அணுவாயுதக் களைவையும் மேற்கொள்ளப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்தே, வடகொரியாவின் கோபத்துக்கு, ஐ.அமெரிக்கா உள்ளாகியிருந்தது.

எனினும், அதன் பின்னர் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மீண்டும் மேம்பட்டு, சந்திப்பு இடம்பெறுமென மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இவற்றுக்கு மத்தியில், ஜூலியானியின் இக்கருத்துகள், வடகொரியாவை மீண்டும் கோபப்படுத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X