2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சவுதி மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கான திட்டத்தை அறிவித்தனர் ஹூதிகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமன் தலைநகர் சனாவை தாங்கள் கைப்பற்றிய ஐந்தாண்டுகளின் பின்னர், யேமனின் மோசமான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான முன்னெடுப்பொன்றின் அங்கமொன்றாக சவுதி அரேபியா மீதான அனைத்துத் தாக்க்குதல்களையும் இடைநிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக யேமனிய ஹூதிப் போராளிகள் நேற்று முன்தினம்  அறிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியின் அரைவாசியை அழித்த அந்நாட்டு எண்ணெய் வழங்கல்கள் மீதான இம்மாத 14ஆம் திகதி ட்ரோன் தாக்குதல்களின் பின்னரே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதல்களுக்கு ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஹூதிகள் உரிமை கோரியபோதும், ஈரானை இதற்காகக் குற்றஞ்சாட்டியிருந்த சவுதி அரேபியாவின் நட்புறவுநாடான ஐக்கிய அமெரிக்கா, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில், சனாவை 2014ஆம் ஆண்டு தாங்கள் கைப்பற்றியதன் நினைவிலான உரையொன்றிலேயே சவுதி அரேபிய பிராந்தியத்துக்கெதிரான அனைத்துத் தாக்குதல்களையும் இடைநிறுத்துவதாக ஹூதிகளின் உயர் அரசியல் சபையின் தலைவர் மெஹ்டி அல்-மஷாட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயத்துக்கு சவூதி அரேபியாவிடமிருந்து பலமான விடயமொன்றால் பதிலளிக்கப்படும் என நம்புவதாக மெஹ்டி அல்-மஷாட் மேலும் கூறியதாக ஹூதிகளின் அல்-மஸிராஹ் தொலைக்காட்சி அலைவரிசை கூறியுள்ளது.

யேமனின் போரில், பெரும்பாலாக பொதுமக்கள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடியாக ஐக்கிய நாடுகள் அழைக்கும் மில்லியன் கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் காணப்படுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .