2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சிங்கப்பூரின் அலுவலக மொழியாக தொடர்ந்தும் தமிழ்’

Editorial   / 2018 மே 15 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரின் அலுவலக மொழியாக உள்ள தமிழை, தொடர்ந்தும் அலுவலக மொழியாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு, சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என, சிங்கப்பூரின் வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் தமிழ்ப் பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியில், “தமிழ் மொழி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை முடிவும் ஆதரவும், தெளிவாக உள்ளது. அதைவிடுத்து, ஒவ்வொரு நாளும் தமிழைப் பேசி, அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும், அந்தச் சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் வளர்ப்பதற்கு, தமிழ் மொழித் திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X