2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிரியா மீது தாக்குதலா? வெள்ளை மாளிகை பின்வாங்குகிறது

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியா மீது ஏவுகணைகள் வீசப்படும் என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள போதிலும், அவரது நிர்வாகம், அவ்விடயத்தில் சிறிது பின்வாங்கலைக் கடைப்பிடிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்து, ஏவுகணைகளை ஏவுவதற்கான திட்டம் தயாராகி விட்டது என்பது போலத் தென்பட்டது. ஆனால் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மற்றிஸ், இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை, ஐ.அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலை, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் தான் நடாத்தினார் என்பதற்கான, போதுமான ஆதாரங்களைக் கொண்டுள்ளாரா எனக் கேட்கப்பட்ட போது, “இது தொடர்பில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார்.

இது, ஜனாதிபதி அல்-அசாட் மீது நேரடியான குற்றச்சாட்டை மேற்கொண்டு, அவரை “மிருகம்” என அழைக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிலிருந்து, முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது.

அத்தோடு, இன்னொரு முக்கிய கருத்தாக, “பொருத்தமாக இருப்பின், இராணுவ ரீதியான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு, ஐ.அமெரிக்க இராணுவம் தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். இராணுவ நடவடிக்கை நோக்கி, ஜனாதிபதி ட்ரம்ப் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் அவருக்குத் திருப்தியின்மை இருக்கிறதா என்ற கேள்வியை, அவரது இக்கருத்து எழுப்பியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .