2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனாவுக்கு எதிரானவரை நியமிக்கிறார் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை மாளிகை தேசிய வர்த்தக சபையின் தலைவராக, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பீற்றர் நவரோ என்ற பொருளாதார நிபுணரை, ட்ரம்ப் பெயரிட்டுள்ளார். ஏற்கெனவே, சீனாவுக்கெதிரான ட்ரம்ப்பின் கருத்துகள் மூலம், இரு நாடுகளுக்குமிடையில் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்நிலையை இது மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"சீனாவால் மரணம்: தனது உற்பத்தித் தளத்தை, அமெரிக்கா எவ்வாறு இழந்தது" என்ற தலைப்பிலான புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு, சீனா எவ்வாறு ஆபத்தானது எனவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார, இராணுவப் பலமாக சீனா எவ்வாறு வர முயல்கிறது என்பதை விவரிக்கும் திரைப்படமொன்றையும் உருவாக்கியிருந்தார்.

அத்தோடு, ஏற்கெனவே தாய்வான் ஜனாதிபதியின் அழைப்பை, ட்ரம்ப் ஏற்றமையால் முரண்பாடு உருவாகியிருந்த நிலையில், தாய்வானுடன் நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில், தொடர்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற கொள்கையையும், பீற்றர் நவரோ கொண்டவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .