2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுவாதி கொலை வழக்கு: நாளை அடையாள அணிவகுப்பு

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சுவாதி எனும் இளம்பெண் கொலை வழக்கில் கொலையாளி என்று சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ராம்குமாரை உறுதிப்படுத்த அடையாள அணிவகுப்பு நாளை 11ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

கடந்த 24ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி எனும் பெண் மர்ம முறையில் வெட்டி கொல்லப்படார். 

அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர் செங்கோட்டை மீனாட்சிநகரில் பதுங்கி இருந்த ராம்குமாரை சந்தேகத்தில் கைது செய்தனர். 

தற்போது ராம்குமார், புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் ராம்குமாருக்கு சம்பந்தம் இல்லை என அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சுவாதி கொலை செய்யப்பட்ட போது, ரயில் நிலைய  தேநீர் விடுதி ஊழியர் ஒருவரும் தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் வேறு சிலரும் சம்பவத்தையும் தப்பி ஓடிய நபரையும் நேரில் பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கொலையை நேரில் பார்த்தவர்களை  வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், ராம்குமார் கொலை செய்த விதத்தை விளக்கும்படி பொலிஸார் கூறுவர். தொடர்ந்து, அவரை நிறுத்தி சம்பந்தப்பட்ட நபர்களை வைத்து இவர்தான் இந்த கொலை செய்தார் என்பதை உறுதிப்படுத்த அடையாள அணிவகுப்பு நடத்துவர். 

அதனையடுத்து, மீண்டும் சிறையில் அடைத்து விசாரணை செய்யும் பொலிஸார், வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தாக்கல் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X