2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘டெங்குத் தடுப்பூசி’ தொடர்பில் விசாரணை

Editorial   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 730,000 சிறுவர்களுக்கு ஏற்றப்பட்ட டெங்குத் தடுப்பூசி தொடர்பில், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி ஏற்றும் பணி, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவில், 9 வயது மற்றும் 9 வயதுக்கு மேற்பட்ட, 730,000 சிறுவர்களுக்கு, டெங்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

ஆனால், இத்தடுப்பூசி காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிலிப்பைன்ஸ் நீதித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த சனோபி என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, டெங்குக்கென அங்கிகரிக்கப்பட்ட முதலாவது தடுப்பூசியாகும். எனினும், இதனால் பக்கவிளைவுகள் ஏற்படலாமென, விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, சிங்கப்பூரின் சுகாதார விஞ்ஞான அதிகாரசபை, இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை, கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தது. குறிப்பாக, டெங்கு முன்னர் ஏற்பட்டிருக்காதவர்களுக்கு இத்தடுப்பூசி ஏற்றப்படும் போது, இதன் விளைவுகள் அதிகமாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே, பிலிப்பைன்ஸில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, தடுப்பூசியைத் தயாரித்த நிறுவனம், இத்தடுப்பூசி காரணமாக, பிலிப்பைன்ஸில் உயிரிழப்புகள் எவையும் பதிவாகியிருக்கவில்லை எனத் தெரிவித்ததோடு, நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .