2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் பயிற்றுநரும் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 10 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் குகைத் தொகுதியில் சிக்கிக் கொண்டிருந்த 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்தாட்ட பயிற்றுநரும், முழுமையாக மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களின் மிகச்சிறப்பான நடவடிக்கையைத் தொடர்ந்தே, அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குகைக்குள் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்தாட்டப் பயிற்றுநரும், குகையிலிருந்து மீட்கப்படும் நடவடிக்கை, 3ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை, 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். நேற்றைய தினம் மேலும் 4 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.

மிகுதி இருந்த 4 சிறுவர்களும் பயிற்றுநரும், இன்று மீட்கப்பட்டனர். முதல் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், 4 சிறுவர்களை மாத்திரம் நேற்று மீட்பது எனவும், பயிற்றுநர், இரவு முழுவதும் குகைக்குள் தங்கியிருக்க வேண்டியேற்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர், 5 பேரையும் மீட்பது என்ற முடிவுக்கு, மீட்புப் பணியாளர்கள் வந்த நிலையில் அந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .