2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீர்ப்பை மாற்றியது மாலைதீவுகள் உச்சநீதிமன்றம்

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கியதைத் தொடர்ந்து, நீதித்துறையை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல் யமீன், அந்நடவடிக்கைகள் காரணமாக, நீதிமன்றத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் எனக் கருதப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் உள்ளிட்ட 9 அரசியல் கைதிகள் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுவிக்க உத்தரவிட்டதோடு, ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறியதன் காரணமாகப் பதவியை இழந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மீண்டும் பதவிக்கு இணைக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

இதை நடைமுறைப்படுத்த, அரசாங்கம் மறுத்ததோடு, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய பின்னர், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், பிரதம நீதியரசரையும் நீதியரசர் ஒருவரையும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியின் ஒருவழிச் சகோதரருமான கயூமைக் கைதுசெய்தது.

இந்நிலையில், இரண்டு நீதியரசர்கள் இல்லாத நிலையில் நேற்று முன்தினம் கூடிய மாலைதீவுகளின் உச்சநீதிமன்றம், 9 அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு வழங்கிய உத்தரவை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது.

எஞ்சிய 3 நீதியரசர்களும் இணைந்து வழங்கிய தீர்ப்பில், “ஜனாதிபதியால் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத் தொடர்ந்து, இத்தீர்ப்பை மீளப்பெறுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டது.

இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தலைமை தாங்கும் மாலைதீவுகளின் ஜனநாயகக் கட்சி, உச்சநீதிமன்றத்தின் 3 நீதியரசர்கள் மீது வழங்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்தே, இத்தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .