2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்கொரியா செல்கிறார் வடகொரியத் தலைவர்

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் சம்பிரதாயபூர்வமான தலைவரான  கிம் யொங் நம், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வைப் பார்வையிடுவதற்காக, தென்கொரியாவுக்குச் செல்லவுள்ளார் என, வடகொரிய அரச ஊடகம் நேற்று (05) அறிவித்தது.

முக்கியமான தலைவரின் இவ்விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்த உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) ஆரம்பிக்கவுள்ள நிலையில், 22 பேர் கொண்ட தூதுக்குழுவொன்று, வெள்ளிக்கிழமை, தென்கொரியாவுக்குச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 3 நாட்களுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

கிம் யொங் நம்மின் இவ்விஜயம், 1953ஆம் ஆண்டு இடம்பெற்ற கொரியத் தீபகற்ப யுத்தத்துக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட விஜயமாக இது அமையவுள்ளது.

ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் பங்குகொள்ளவுள்ள நிலையில், இன்னமும் முக்கியத்துவமிக்கதாக, இவ்விஜயம் அமையவுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகள் காரணமாக, அந்நாடு மீது ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வடகொரிய வீரர்களும் ஏனையோரும், தென்கொரியாவுக்கு வருவதில் சிக்கல் காணப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்போட்டிகளுக்காகவென மாத்திரம், கப்பல்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது என, தென்கொரியா அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .