2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெளிவான முன்னிலையை நோக்கி மக்ரோன்

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின், நேற்று (18) இடம்பெற்ற இரண்டாவது சுற்று வாக்களிப்பைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி, பாரியதொரு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

மக்ரோனின் நகர்வில் குடியரசுக் கட்சியும், அதன் நட்புறவுக் கட்சிகளும், 577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 351 ஆசனங்களை வென்றுள்ளதாக, நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் இரண்டாவது சுற்றைத் தொடர்ந்ததான, 16 மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மக்ரோன் நிறுவிய கட்சி, பிரெஞ்சு அரசியல் வரைபடத்தை மீள வரைந்துள்ளபோதும், வாக்களிப்புக்கு முந்தையதான சில கருத்துக்கணிப்புகள் கூறியதைப் போல, 470 ஆசனங்களைப் பெறவில்லை.

எவ்வாறெனினும், சாதனை ரீதியான குறைவாக, 44 சதவீதத்துக்கும் குறைவாகவே, நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்களிப்பு பதிவாகியுள்ளது.  

தேசிய முன்னணிக் கட்சி வென்ற எட்டு ஆசனங்களிலொன்றாக, முதற்தடவையாக லு பென் நாடாளுமன்றத்துக்குச் செல்கின்றார். எனினும், தமது 15 ஆசன இலக்கை விட குறைவான ஆசனங்களையே தேசிய முன்னணி பெற்றுள்ளது.   

முன்னாள் ஜனாதிபதி பொஸ்வா ஒலாந்தேயின் சோஷலிசக் கட்சி, 250க்கும் அதிகமான ஆசனங்களை இழந்து, 29 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.  

இந்நிலையில், சோஷலிசக் கட்சியை விட மேம்பட்ட முடிவுகளை பெற்றுள்ள குடியரசுக் கட்சி, கடந்த முறை நாடாளுமன்றத்தில் பெற்ற 200க்கு மேற்பட்ட ஆசனங்களிலிருந்து குறைவடைந்து,

இம்முறை 131 ஆசனங்களையே பெற்றபோதும், பிரதான எதிர்க்கட்சியாக தொடருகிறது.   
இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில், சாதனை ரீதியாக, 223 பெண்கள் தெரிவாகியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .