2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேடப்பட்டுவோர் பட்டியலில் சதாமின் மகள்

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா, முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் பாத் கட்சி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில், தேடப்படுவோரின் பட்டியலொன்றை, ஈராக் பாதுகாப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில், 60 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

இப்பட்டியலில், சதாம் ஹுஸைனின் மகளான றாகட்டும் உள்ளடங்கியுள்ளார். இவர், ஜோர்தானில் வசித்து வருகிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைச் சேர்ந்த 28 பேர், அல்-கொய்தாவைச் சேர்ந்த 12 பேர், பாத் கட்சியைச் சேர்ந்த 20 பேர் என, இவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 60 பேரில், லெபனானைச் சேர்ந்த ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும், ஈராக்கியர்களாவர். லெபனானைச் சேர்ந்த நபர், ஈராக்குக்கு எதிராகப் போரிடுவதற்கு, ஈராக்கியர்களைப் படைக்குச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

ஆனால் இப்பட்டியலில், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. என்ன காரணத்துக்காக அவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்த, அதிகாரிகள் தவறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .