2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நான் இறக்கவில்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் ஜனாதிபதி முஹம்மட் புஹாரி, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார் எனவும், அவருக்குப் பதிலாக, அவரைப் போன்று தோற்றமளிக்கும் ஒருவரே இப்போது காணப்படுகிறார் எனவும் வெளியான தகவல்களை, ஜனாதிபதி புஹாரி மறுத்துள்ளார் என, அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புஹாரியின் உடல்நிலை தொடர்பில், தொடர்ச்சியான சந்தேகங்கள் காணப்படும் நிலையிலேயே, இவ்வதந்தியும் பரவியிருந்தது. சூடானைச் சேர்ந்த ஒருவரே, ஜனாதிபதி போன்று செயற்படுகிறார் என, உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் பரவியிருந்தன.

இந்நிலையில், போலந்திலுள்ள நைஜீரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி புஹாரி, “உண்மையான நான் தான் நான். உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எனது 76ஆவது பிறந்ததினத்தை, விரைவில் நான் கொண்டாடப் போகிறேன். இன்னும் பலமாக நான் செல்லவுள்ளேன்” எனத் தெரிவித்தாரென, ஜனாதிபதி புஹாரியின் ஊடகப் பேச்சாளரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தெரிவித்தது.

“எனது மோசமான உடல்நிலைமையின் போது, நான் உயிரிழக்க வேண்டுமெனப் பலர் விரும்பினார்கள்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டாரென, அவரின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள புஹாரியின் உடல்நிலை, அண்மைய சில ஆண்டுகளாக, அதிக கேள்விகளை எழுப்பும் ஒன்றாகக் காணப்படுகிறது.

குறிப்பாக, அவரின் உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பது, இரகசியமாகவே பேணப்படுவதோடு, முன்பளவுக்குப் பகிரங்கமான மேடைகளில் அவர் தோன்றுவதில்லை என்பது, பல வதந்திகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .