2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நீதியரசருக்குச் சித்திரவதை?

Editorial   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதியரசர், தவறாக நடத்தப்படுகிறார் என, மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற பிரதம நீதியரசரும் இன்னொரு நீதியரசரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதில் நீதியரசரான அலி ஹமீட், தடுப்பின் போது மோசமாக நடத்தப்படுகிறார் என, நஷீட் குற்றஞ்சாட்டினார்.

நீதியரசர் அலி, காயமடைந்து, வைத்தியசாலையொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என, உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கயூம், சிறையில் வைத்து உண்பதற்கு மறுத்துவருகிறார் எனவும் நஷீட் குறிப்பிட்ட போதிலும், அது உண்மை கிடையாது என, கயூமின் மகளான துனியா மௌமூன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X