2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பர்தா அணியத் தடை

Editorial   / 2018 மே 31 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்மார்கில் பொதுஇடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

முகத்தை மறைக்க தடை குறித்த சட்ட வரைபை இன்று அந்நாட்டு  அரசு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

75 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இந்த சட்டவரைபு வெற்றிப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, பொதுஇடங்களில் எவரேனும் முகத்தை திரையிட்டு மறைத்திருந்தாலோ அல்லது முகத்தை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .