2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பழமைவாதக் கட்சியின் ஆசனங்களை சவாலுக்குட்படுத்துவதிலிருந்து ஃபராஜ் பின்வாங்கல்

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் அடுத்த மாத 12ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பழமைவாதக் கட்சியின் ஒவ்வொரு ஆசனங்களையும் சவாலுக்குட்படுத்துவதாக தான் தெரிவித்ததிலிருந்து பிரெக்சிற் கட்சித் தலைவரான நைஜல் ஃபராஜ் நேற்று பின்வாங்கியுள்ளார்.

அந்தவகையில், குறித்த நகர்வானது பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஊக்கமொன்றாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான வாக்குகளை பிரெக்சிற் கட்சி பிரித்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்று, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான இரண்டாவது பொதுஜன வாக்கெடுப்பை நிகழ்த்துவதற்கு உதவுகிறது என விமர்சனத்தை நைஜல் ஃபராஜ் எதிர்கொண்டிருந்த நிலையிலேயே மேற்கூறப்பட்ட கருத்து வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு பொதுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஆதரித்தவர்கள் உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றிய சார்புக் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நூற்றுக்கணக்கான ஆசனங்களில் போட்டியிட நைஜல் ஃபராஜ் எதிர்பார்த்துள்ளார்.

அந்தவகையில், இந்த நகர்வும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சியின் வாக்குகளை பெற வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .