2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வு

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இம்மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில், நேற்று முன்தினம் (10) இரவு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, 20ஆக உயர்வடைந்துள்ளது. இத்தேர்தலுக்கு முன்னராக இடம்பெற்ற, முதலாவது மிகப்பெரிய அளவிலான தாக்குதலாக இது அமைந்தது.

இத்தாக்குதல் தொடர்பான தகவல்களை நேற்று (11) வழங்கிய பொலிஸார், இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில், அவாமி தேசிய கட்சி என்ற கட்சியின் தலைவர் ஹரூன் பிலோவுர், இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் உள்ளடங்குகிறார் எனக் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டோர் தவிர, மேலும் 63 பேர் காயமடைந்தனர் எனவும், அவர்களுள் 35 பேர், இன்னமும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக் காணப்படுகின்றனர் எனவும், அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வடமேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள பெஷாவுர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு, தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். தலிபான் போன்ற தீவிரவாதத் தரப்புகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கட்சியாக, அவாமி தேசிய கட்சி காணப்பட்டது. எனவே தான், அக்கட்சி இவ்வாறு இலக்குவைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.

கொல்லப்பட்ட ஹரூன் பிலாவுர், ஒரு சட்டத்தரணியும் ஆவார் என்ற அடிப்படையில், பெஷாவர் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகள், பணிப்புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .