2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பாகிஸ்தான் எதையும் கொடுக்கப்போவதில்லை’

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாநிலத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் மக்கள் அனைவரும், இந்தியாவிலிருந்தே சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனரே தவிர, வேறு நாடுகளிடமிருந்து இல்லை என்று, பாகிஸ்தானை குறிப்பிட்டு, ஜம்மு - காஷ்மிர் முதலமைச்சர் மெஹ்போபா முஃப்தி கருத்து வெளியிட்டுள்ளார்.  

“நாம், ஜம்மு - காஷ்மிர் மற்றும் இந்திய அரசமைப்புடன் ஒத்துப் போகாவிடின், நாம் எதனை நம்புவது. இதன்மூலம், நீங்கள், என்ன பெற்றுக்கொள்ளவுள்ளீர்கள்” என்று, ஜம்மு - காஷ்மிர் சட்டப்பேரவையில் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.  

மாநிலத்துக்கு என்ன செய்தாலும், அவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்துகொள்வோர், இந்தியாவிலிருந்ததையும் பெற்றுக்கொள்கின்றனர் என்பதை தான் நினைவுபடுத்த விரும்புவதாக அவர் கூறினார்.  

இதேவேளை, காஷ்மிரிலுள்ள இளைஞர்கள், அங்கு வன்முறையைக் கையிலெடுப்பதை நிறுத்திவிட்டு, மாநில மற்றும் இந்திய அரசமைப்புக்கு மரியாதை செலுத்துமாறு இதன்போது அவர் கோரினார்.  

“நாட்டிலிலேயே, ஜம்மு - காஷ்மிர் சட்டப்பேரவையே, மிகவும் பலமானதொன்றாகும். ஜி.எஸ்.டி, நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்ட போதும், எம்முடைய மாநிலத்தில் மாத்திரம், அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அமுலுக்கு வந்தது. இதுவே, எம்முடைய சட்டப்பேரவையின் சிறப்பம்சமாகும்” என்று இதன்போது அவர் கூறினார்.  

ஜம்மு - காஷ்மிர் பிரச்சினை குறித்து, இந்தியாவும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தினால், தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறிய அவர், பேச்சுவார்த்தையால் மாத்திரமே, இதை நிறைவுக்கு கொண்டுவரமுடியுமே தவிர, வன்முறைகளால் அல்ல என்றும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .