2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பா.ஜ.கவை குற்றஞ்சாட்டி மக்களவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) முயல்வதாகக் குற்றஞ்சாட்டி, மக்களவையில் குழப்பத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

ஆட்சியைக் கலைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், மத்திய அரசாங்கத்தால், இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கூட்டணி அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 13 பேர், இராஜினாமா செய்வதாக, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தபோதிலும், சபாநாயகர் அதை ஏற்கவில்லை.

எனினும் அவர்கள் பதவி விலகுவதில் உறுதியாக உள்ளமையால், அவர்களை சமாதானம் செய்ய, கட்சித் தலைமை தொடர்ந்து முயன்று வந்தாலும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.

ஆளும் கூட்டணி, கட்சியினரிடையே கிளர்ச்சியை தூண்டிவிட்டதாகவும், உறுப்பினர்களை இராஜினாமா செய்ய வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்து வருகிறது. இதனால் கர்நாடக அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையிலேயே, இன்று (10) காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .