2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பிரச்சினை தீரும்வரை சோதனைகளுக்கு ஒத்துழைப்பில்லை’

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தின் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அப்பிரச்சினை தீரும்வரை, தமது அணுசக்தித் தளங்கள் மீதான சோதனையை மேற்கொள்வதற்கு, ஐக்கிய நாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கப் போவதில்லையென, ஈரான் அறிவித்துள்ளது.

இதன்மூலமாக, ஈரான் அணுவாயுத ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகள், தொடர்ந்து நீடித்த வண்ணமுள்ளன.

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வொப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக, ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே, ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, ஐரோப்பிய நாடுகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

அணுவாயுத ஒப்பந்தம் செயலிழந்து போனால், ஈரான் மீதான  பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமுலுக்கு வருமென்ற போதிலும், மறுபக்கமாக, அதன் அணுவாயுதத் திட்டங்களை மீண்டும் நடைமுறைப் -படுத்துவதற்கான வாய்ப்பு, ஈரானுக்கு ஏற்படும்.

இவற்றுக்கு மத்தியில், அணுவாயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டலுக்கான, தமது நாட்டு வளங்களை அதிகரிப்பதற்கு, ஈரானால் ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவென்ற கேள்விகள் எழுந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .