2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புகலிடத்தை நிராகரித்தார் சட்டமா அதிபர் செஷன்ஸ்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட எல் சல்வடோர் பெண்ணொருவருக்கு புகலிடத்தை வழங்குவதை ஐக்கிய அமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ் நிராகரித்துள்ளார்.

அந்தவகையில், தத்தமது நாடுகளிலிருந்து பாலியல், குழு, ஏனைய வகையான வன்முறைகளிலிருந்து அடைக்கலம் கோருவதற்கான கோரிக்கையை செஷன்ஸ் நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், தனது முன்னாள் கணவனால் வன் புணரப்பட்டு 15 ஆண்டுகளாக அடி வாங்கிய எல் சல்வடோர் பெண்ணுக்கான புகலிடத்தை நிராகரித்தன் மூலம் குற்றவியல் நடவடிக்கையொன்றின் மூலம் பாதிக்கப்படுவர்கள் புகலிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாகவே குறித்த வழக்கில் தனிப்பட்ட ரீதியில் செஷன்ஸ் தலையிட்டிருந்தார். குறித்த பெண்ணின் புகலிடக் கோரிக்கையை கீழ்மட்ட குடியேற்ற நீதிமன்ற நீதிபதி நிராகரித்திருந்ததை அவர் குடியேற்ற முறைப்பாடுகளுக்கான சபையில் முறையிட்டு வென்றிருந்த நிலையிலேயே செஷன்ஸ் தலையிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த முடிவடி பேரழிவானது எனக் கூறிய குறித்த பெண்ணின் வழக்கறிஞர் கரென் முஸலோ, இது குறித்த பெண்ணை கவலைக்குள்ளாக்குவதாகத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், குடியேற்ற முறைப்பாடுகளுக்கான சபையில் மீண்டும் குறித்த பெண் முறையிட முடியும் என்பதோடு, பின்னர் மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், இறுதியாக ஐக்கிய அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செஷன்ஸின் குறித்த முடிவு, டசின் கணக்கான குடியேற்ற உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழுக்கள், வழக்கறிஞர்களிடத்தே எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X