2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மது அருந்திய ஒன்பது பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரசாயனம் கலந்த மதுவை அருந்தி, ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, பாராபங்கி மாவட்டத்தின் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.  

உறவினர்கள் ஒன்று சேர்ந்து, நேற்று முன்தினம் (10) மரு அருந்தியதையடுத்து, அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மயக்கம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேரின் பிரேத பரிசோதனைகளின் பின்னர், அவர்கள் மது அருந்தியதற்கு பின்னரே உயிரிழந்ததாக, தெரிவிக்கப்படுகின்றது.  

அவர்கள், இரசாயனப் பதார்த்தம் அடங்கிய மதுவையே அருந்தியுள்ளனர் என, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான வானிைல காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனரென, மாவட்ட கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதையடுத்து, பொலிஸார் உள்ளிட்ட கலால் திணைக்கள அதிகாரிகள், நேற்று (11) காலை முதல், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

சட்டவிரோமான மது விற்பனையில் ஈடுபடுவர்களுக்கு, மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என்று, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்த பின்னர் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்புகள் இதுவாகும். இதற்கான சட்டமூலம், சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை (08) அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X