2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாநில உள்ளாட்சித் தேர்தல்: நகராட்சிகளைக் கைப்பற்றியது பா.ஜ.க

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குஜராத் மாநிலத்தில் 7 நகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில், பா.ஜ.க 5இல் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

குஜராத் மாநிலத்தில், கடந்த சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி, படேல் இனத்தவர்கள், கடந்த 2015ஆம் ஆண்டு, போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் முழுவதும் நடந்த போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர். இது, பா.ஜ.க அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில், அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவு பெருகியது. கடந்த 2015இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 6 நகராட்சிகளை, பா.ஜ.க தக்கவைத்துக் கொண்ட போதிலும், ஊரகப் பகுதியில், பா.ஜ.க வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.  

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கு, டிசெம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய 2 கட்சிகளும், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில், 7 நகராட்சி உட்பட 8 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளன. 

குறிப்பாக, ஏற்கெனவே காங்கிரஸிடமிருந்த 3 இடங்களை, பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. இரண்டு நகராட்சிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X