2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’மியான்மாரால் பிராந்தியத்தில் மத வன்முறைகள் ஏற்படும் ஆபத்து’

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரில், இனவழிப்பும் இனச்சுத்திகரிப்பும் இடம்பெற்றி ருக்கலாம் என்ற, தனது முன்னைய குற்றச்சாட்டை, நேற்று (06) மீளவும் வலியுறுத்திய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இதன் காரணமாக பிராந்தியத்தில் மத அடிப்படையிலான வன்முறைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளனவெனவும் எச்சரித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், “மியான்மார், பாரதூரமான நெருக்கடியொன்றை எதிர்கொள்கிறது. இது, பிராந்தியத்தின் பாதுகாப்பில், பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது” என்றார்.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், பாரிய மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றன என, கடந்த வாரம் வெளியாகிய அறிக்கை வெளிப்படுத்தியிருந்த பின்னணியிலேயே, இவ்வுரை இடம்பெற்றுள்ளது.

ராக்கைன் மாநிலத்தில், சமூக - பொருளாதார அபிவிருத்தி மீதான கவனம் உட்பட, பலமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் ஹுஸைன், எனினும், சிறுபான்மையினருக்கு எதிராக, நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடு காணப்படுவதை மறைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தம்மால், இனவழிப்பு மேற்கொள்ளப்படவில்லை என, மியான்மார் மறுப்பதோடு, ராக்கைனில் காணப்பட்ட றோகிஞ்சா ஆயுததாரிகளுக்கு எதிராக, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறுகிறது. அத்தோடு, மியான்மாரில் பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பாகக் கடந்த வாரத்தில் வெளியாகியிருந்த அறிக்கையையும், அவ்வரசாங்கம் நிராகரித்திருந்தது.

மூன்று நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு, இந்தோனேஷியாவுக்குச் சென்றுள்ள உயர்ஸ்தானிகர் ஹுஸைன்,  ஜனாதிபதி ஜோகோ விடோடோ உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ளார். அவருடைய உரையில், இந்தோனேஷியாவில், சமபாலுறவாளர்களுக்கு எதிராகக் காணப்படும் பாகுபாடு தொடர்பில், அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மியான்மார் விடயம் தொடர்பில் எந்தளவுக்குக் கலந்துரையாடப்படும் எனத் தெரியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .