2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முற்கூட்டிய தேசிய சபைத் தேர்தல் குறித்து ஆராயும் அரசமைப்பு சபை

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா தேசிய சபையின் 2020ஆம் ஆண்டுத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவது குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றை உருவாக்குவதற்கு அந்நாட்டின் அரசமைப்புச் சபை நேற்று இணங்கியுள்ள நிலையில், எதிரணியால் கட்டுப்படுத்தப்படும் தேசிய சபையை வெனிசுவேலா அரசாங்கம் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தவுள்ளது.

முன்னதாக, தன் சபாநாயகராக இருக்கும் தேசிய சபையை கலைப்பது குறித்து அரசமைப்புச் சபை நேற்று தீர்மானிக்கும் என குவான் குவைடோ கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய சபையையைக் கலைக்கும் தேவையில்லை எனவும், அது தானாகவே தன்னை வெளியேற்றிக் கொள்ளும் என அரசமைப்பு சபையின் சபாநாயகர் டியோஸ்டடோ கபெல்லோ கூறியுள்ளார்.

தேசிய சபையைக் கலைக்கும் எந்தவொரு நகர்வும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ மீதான விமர்சனத்தை சர்வதேச சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என்பதோடு, நோர்வேயால் அனுசரணை வழங்கப்படும் அரசாங்கத்துக்கும், குவான் குவைடோ தரப்பினருக்குமிடையிலான வெனிசுவேலாவின் அரசையல் நெருக்கடிக்கான தீர்வொன்றை அடையும் பொருட்டான பேச்சுகளையும் இடைநிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னதாக மூன்று எதிரணி உறுப்பினர்கள் மீது தேசத்துரோக, சதித் திட்டக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை வெனிசுவேலா உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் சுமத்தியிருந்தது. 2018ஆம் ஆண்டு முதல் இவ்வாறாக 21 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் காவலில் உள்ள நிலையில் ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன் அல்லது வேறு நாடுகளின் தூதரங்களில் அடைக்கலம் கோரியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X