2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மூனை அழைக்கிறது வடகொரியா

Editorial   / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை, வடகொரியாவுக்கு வருமாறு, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் அழைத்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதிக்கும் வடகொரியத் தூதுக்குழுவுக்கும் இடையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இவ்வாறான சந்திப்பு இடம்பெறும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையும்.

வடகொரியத் தலைவரின் தனிப்பட்ட இவ்வழைப்பை, அவரின் தங்கையான கிம் யோ ஜொங், நேரடியாக, தென்கொரிய ஜனாதிபதியிடம் கையளித்தார்.

தென்கொரிய ஜனாதிபதியை, விரைவாகச் சந்திக்க விரும்புவதாகவும், அவர் வடகொரியாவுக்கு விஜயம் செய்வதை விரும்புவதாகவும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டதோடு, “அது நடப்பதற்கான சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம்” என்றும் குறிப்பிடப்பட்டது.

இவ்வழைப்பை, ஜனாதிபதி “பகுதியளவில் ஏற்றுக் கொண்டார்” என, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்ற பிரசாரத்தை மையப்படுத்திய ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மூன் ஜே-இன், அவ்வாறான சந்திப்பொன்றை நடத்துவாராயின், அவருக்கான மிகப்பெரிய வெற்றியாக அமையும். ஆனால், அவ்வாறான சந்திப்பை, ஐக்கிய அமெரிக்கா விரும்புமா என்பது, சந்தேகத்துக்குரியதாக அமையும்.

தென்கொரியாவுடன் நேரடியான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, வடகொரியா விடுத்த அழைப்பு, ஐ.அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. தற்போது, இருநாட்டுத் தலைவர்களும் சந்திப்பது, கொரியத் தீபகற்பத்தில் ஐ.அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் ஒன்றாகவே கருதப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .