2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யேமன் போருக்கான ஐ. அமெரிக்க உதவியை நிறுத்த செனட் வாக்களித்தது

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில், சவூதி அரேபியா தலைமையிலான போருக்கான ஆதரவை நிறுத்த, ஐக்கிய அமெரிக்க செனட், நேற்று முன்தினம் வாக்களித்துள்ளது.

அந்தவகையில், யேமனில் இடம்பெறுகின்ற மோதல்களிலிருந்து அல்லது யேமனைப் பாதிக்கின்ற நடவடிக்கைகளிலிருந்து, ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படைகளை அகற்றுமாறு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பணிக்கும் தீர்மானத்தையே, குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் செனட்டின் உறுப்பினர்கள் அனுமதித்திருந்தனர்.

ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து, குடியரசுக் கட்சியின் ஏழு உறுப்பினர்கள் ஏழு பேர் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக வாக்களித்த நிலையில், குறித்த தீர்மானமானது 54-46 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், குறித்த தீர்மானமானது, ஜனநாயகக் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் பிரதிநிதிகள் சபைக்குத் தற்போது செல்லவுள்ள நிலையில், அங்கு இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில், குறித்த தீர்மானம் குறைகளைக் கொண்டதெனவும் பிராந்தியத்தில் இருதரப்பு உறவுகளைப் பாதிக்குமென்றும் தீவிரவாதத்துக்கெதிராகப் போராடும் ஐக்கிய அமெரிக்காவின் தகமையைப் பாதுக்குமென்றும் எனத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, குறித்த தீர்மானத்தை வீட்டோ செய்யவுள்ளதாக எச்சரித்துள்ளது.

அந்தவகையில், குறித்த தீர்மானமானது முழுமையாக நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் இராணுவ அதிகாரங்களை நேரடியாகத் தடுப்பதற்காக, 1973ஆம் ஆண்டு போர் அதிகாரங்கள் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்வதற்காக காங்கிரஸால் அனுமதிக்கப்பட்ட முதலாவது தீர்மானமாக அமையும்.

இந்நிலையில், காங்கிரஸில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தனது பதவிக்காலத்தின் முதலாவது வீட்டோவை, ஜனாதிபதி ட்ரம்ப் பிரயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சவூதிக் கூட்டணிக்கு ஆயுதங்களை ஐக்கிய அமெரிக்கா வழங்குவதுடன், எரிபொருட்களையும் மீள நிரப்புகிறது.

அந்தவகையில், துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத்தூதரகத்தில், சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி, கடந்தாண்டு ஒக்டோபரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மீதான தமது எதிர்ப்பை காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர் என்பதை குறித்த தீர்மானம் வெளிக்காட்டுகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .