2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில், முன்னாள் ரஷ்ய முகவரான சேர்ஜி ஸ்கிறிப்பல், அவரது மகள் யூலியா மீது இரசாயனத் தாக்குதலொன்றை ரஷ்யா மேற்கொண்டதென தாம் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான ஹீதர் நோர்ட் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடைகள் தொடர்பாக நேற்று முன்தினம் ரஷ்யாவுக்கு அறிவிக்கப்பட்டதாக ஹீதர் நோர்ட் மேலும் கூறியுள்ளார். குறித்த அறிவிப்பை ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் பேச்சாளரொருவர் வரவேற்றுள்ளார்.

இதேவேளை, ஒத்துழைப்பை முன்மொழிகின்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடிதமொன்றை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கையளித்துள்ளதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐக்கிய அமெரிக்க செனட்டர் றன்ட் போல்ட் நேற்றுத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் இராணுவ புலனாய்வுச் சேவையின் முன்னாள் கேணலொருவரான சேர்ஜி ஸ்கிறிப்பலும் அவரது மகளான யூலியாவும் தென் இங்கிலாந்து நகரான சலிஸ்பேரியில், அவர்களின் வீட்டு முன் கதவில் திரவமொன்று தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச்சில் நினைவற்றவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் 100 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X