2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’வடமேற்கு சிரிய மோதல்களில் ‘35 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 மே 15 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற மோதல்களில், 24 மணித்தியாலங்களில் 35 பேர் கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கத்தின் எந்த வலிந்த தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கும் மாதக் கணக்கான யுத்த சூனிய வலய ஒப்பந்தத்துக்கு மத்தியிலும், சிரிய அரசாங்கத்தினதும், அதன் நட்புறவு நாடான ரஷ்யாவினதும் அதிகரித்த தாக்குதலுக்கும் அண்மைய வாரங்களில் வடமேற்கு சிரியப் பிராந்தியம் உள்ளாகியிருந்தது.

வடமேற்கு சிரியப் பிராந்தியத்திலுள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான, அதன் அயலிலுள்ள அலெப்போ, ஹமா, லடாக்கியா மாகாணங்களில் பகுதிகளை, அல்-கொய்தாவின் முன்னாள் சிரியக் கிளையான ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் கட்டுப்படுத்துகின்றது.

இந்நிலையில், வடமேற்கு சிரியாவின் லடாக்கியா மாகாணத்தின் ஜபல் அல்-அக்ரட் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நேற்று முன்தினம் வரை இடம்பெற்ற மோதல்களில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் 16பேரும், இஸ்லாமிய ஆயுததாரிகள் 19 பேரும் இறந்ததாக, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் ரஷ்ய, சிரிய அரசாங்க விமானங்கள், குண்டுத் தாக்குதல்கள் நடத்தியதாகவும், இஸ்லாமிய ஆயுததாரிகளின் பலம்வாய்ந்த தென்பகுதிகளையும் தாக்கியதாகவும் மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், கஃப்ரன்பெல் நகரத்திலுள்ள ‘வைட் ஹெல்மட்ஸ்’ மீட்புப் பணியாளர்களின் கிளையொன்றை ரஷ்ய வான் தாக்குதல்கள் தாக்கியதில் அதை இயக்க முடியாமல் உள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும், மீட்புப் பணியாளரொருவரும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X