2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு இராணுவம் தயாராகவும்’

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக, எகிப்துக்கு உள்ளேயும் வெளியேயும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராகுமாறு, தனது இராணுவத்துக்கு, எகிப்து ஜனாதிபதி அப்டெல் பத்தா எல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.   

இதுதவிர, லிபியானின் முன்னாள் இராணுவத் தளபதியான காலிஃபா ஹஃப்தாரின் கிழக்கு லிபியாவைத் தளமாகக் கொண்ட லிபிய தேசிய இராணுவத்துடனான தற்போதைய முன்னரங்கை கடக்க வேண்டாம் என, லிபியாவின் தேசிய இணக்க அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகளையும் ஜனாதிபதி அப்டெல் பத்தா எல்-சிசி எச்சரித்துள்ளார்.   

எகிப்தின் 1,200 கிலோமீற்றர் நீளமான லிபியாவுடனான மேற்கு எல்லைக்கருகேயுள்ள வான்தளத்துக்கு, நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதே, மேற்குறித்த கருத்தை ஜனாதிபதி அடெல் பத்தா எல்-சிசி வெளிப்படுத்தியுள்ளார்.   

இதேவேளை, லிபியாவில் தலையிட எகிப்து விரும்பவில்லையென்றும், பொதுவாக அரசியல் தீர்வொன்றையே விரும்புகின்றது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அடெல் பத்தா எல்-சிசி, ஆனால் நிலைமை தற்போது வேறுமாதிரி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X