2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமர்சகர்களை விமர்சிக்கிறது சீனா

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்குக் காணப்பட்ட எல்லைகளை நீக்கும் அரசமைப்புத் திருத்தத்துக்கு, சீன நாடாளுமன்றத்தில் அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், அத்திருத்தத்துக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் மீது, சீன அரச ஊடகம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

சீன அரசியலில், கம்யூனிஸ்ட் கட்சியே முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் நிலையில், இந்த அரசமைப்புத் திருத்தம், அந்த ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதோடு, ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் ஆதிக்கமும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சர்வாதிகாரத்தை நோக்கி, சீனா நகர்ந்து செல்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

எனினும், அவ்விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது போல, “மேற்கத்தேய அரசியல் கட்டமைப்பு, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குப் பொருந்தாது எனவும், அக்கட்டமைப்புகளால் மோசமான முடிவுகளே பெறப்படுகின்றன என்பதுவும், கடினமான உண்மையாக இருந்துள்ளது” என, அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, ஜனாதிபதிப் பதவிக்கான எல்லையை இல்லாது செய்தல், எந்தத் தலைவரும் ஆயுட்கால ஜனாதிபதியாக இருப்பாரென அர்த்தமில்லை எனவும், அவ்வூடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .