2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹொடெய்டா ர் மீதான தாக்குதலை நிறுத்த முயல்கிறது ஐ.நா

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனிலுள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி குழுவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியாவுக்கிடையே, யேமனின் ஹொடெய்டா துறைமுகநகர் மீதான தாக்குதலை தடுக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தெரிவித்துள்ளனர்.

ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு யேமன் நகரான ஹொடெய்டா, யேமன் போரில் நீண்ட காலமாக இலக்காகக் காணப்படுகின்ற நிலையில், சவூதி தலைமையிலான இராணுவத் தாக்குதல் அல்லது முற்றுகையில் 250,000 வரையான உயிர்கள் பறிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.

செங்கடலையொட்டி காணப்படும் ஹொடெய்டா துறைமுகமே யேமனின் பெரும்பாலான வர்த்தக இறக்குமதிகள், மனிதாபிமான தொண்டு உதவிகளைக் கையாளுகையில் மில்லியன் கண்க்கானோருக்கான வாழ்வாதாரமாகக் காணப்படுகிறது.

ஹொடெய்டாவுக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் கடும் சண்டை மூண்டதையடுத்து இது குறித்து அறிவதற்காக, ஐக்கிய இராச்சியத்தின் கோரிக்கையின் பேரில் மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் கூடியிருந்தது.

இந்நிலையிலேயே, தாங்கள் தீவிரமான கலந்துரையாடலில் தாங்கள் இருப்பதாகவும் இது ஹொடெய்டாவில் மோதலொன்றைத் தவிர்க்கும் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், இராணுவ தாக்குதல் உடனடியாக நடைபெறப் போகின்றது என தொண்டுக் குழுக்களுக்கு ஐரோப்பிய நிதியுதவி வழங்கும் நாடுகள் தகவல் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த சனிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்குள் ஐக்கிய நாடுகளும் அதன் பங்காளர்களும் ஹொடெய்டாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது சர்வதேசப் பணியாளர்களை ஹொடெய்டாவிலிருந்து ஐக்கிய நாடுகள் வெளியேற்றியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .