2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விசா இல்லாத பயணத்துக்கு அனைத்து நிபந்தனைகளையும் துருக்கி நிறைவேற்ற வேண்டும்: ஜெர்மன் சான்சிலர் மேர்

Shanmugan Murugavel   / 2016 மே 24 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா இல்லாத பயணத்தை துருக்கிப் பிரஜைகள் ஜூலை முதலாம் பெறுவதற்கு முன்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் துருக்கி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய ஜெர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்க்கல், துருக்கியின் பயங்கரவாதத்துக்கெதிரான சட்டம் தொடர்பாக துருக்கியுடன் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக ஜூலை முதலாம் திகதி என்ற இலக்கு பின்தள்ளிப் போகலாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் துருக்கி ஜனாதிபதி ரீசெப் தய்யீப் எர்டோவானை திங்கட்கிழமை (23) சந்தித்த பின்னர் கருத்து தெரிவித்த மேர்க்கல், சில விடயங்கள் ஜூலை முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படாது என முற்கூட்டியே தெரிவதாக தெரிவித்த அவர், ஏனெனில் நிபந்தனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லையெனத் தெரிவித்தார்.

இங்கு பிரச்சினை என்னவெனில், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை நீக்குவது என துருக்கி நாடாளுமன்றம் அண்மையில் எடுத்த முடிவே ஆகும். விமர்சகர்களின் கருத்துப்படி இதன் மூலம் குர்திஷ் சார்பு அரசியல்வாதிகள் ஒடுக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இது தொடர்பில் தனது கரிசனையை எர்டோவானிடம் வெளிப்படுத்திய மேர்க்கல், சுயாதீன நீதி, ஊடகத்தையும் துருக்கி கொண்டிருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .