2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீனாவின் புதிய ஜனாதிபதி ஜின்பிங்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் புதிய ஜனாதிபதியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஸி ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. 

2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியிலிருந்து சீன ஜனாதிபதியாக இதுவரை காலமும் பதவி வகித்துவந்த ஹு ஜின்டோ பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இவர் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்ய அந்நாட்டு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்த நிலையில்,  இதற்கான கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் பீஜிங்கில் கடந்த 14 நாட்களாக நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ தான் பதவி விலகுவதை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்தே சீனாவின் புதிய ஜனாதிபதியாக தற்போதைய உபஜனாதிபதியான ஸி ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .