2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

43 பேர் பலி; 500 பேர் பாதிப்பு என்கிறது சுகாதார ஸ்தாபனம்

Editorial   / 2018 ஏப்ரல் 13 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டாவிலுள்ள டூமா பகுதியில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 43 பேர் கொல்லப்பட்டதோடு, 500க்கும் மேற்பட்டோருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

இத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள், மிகவும் நச்சுத்தன்மையான இரசாயனங்களை நுகர்ந்ததன் காரணமாக ஏற்படும் அறிகுறிகளை வெளிப்படுத்தினர் என, அந்த அமைப்புத் தெரிவித்தது. 

இத்தாக்குதலில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு, தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும், உலக சுகாதார ஸ்தாபனம், தற்போது தான் முதன்முறையாக, இது தொடர்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்த உயிரிழப்புகளைத் தவிர, தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காக ஒதுங்கியிருந்த மக்களில் 70க்கும் மேற்பட்டோர், இன்னொரு சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்டனர் எனவும், அவ்வமைப்புக் குறிப்பிட்டது. 

இரசாயன ஆயுதங்களின் பயன்பாடு தொடர்பான, தடவியல் விசாரணையில், உத்தியோகபூர்வமான பங்கேதும் தமக்கு இல்லை என, இதன்போது உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டது. 

எனினும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை நிராகரித்த, ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான சிரியத் தூதுவர் ஹுஸாம் எடின் ஆலா, “அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்” என, அதைக் குறிப்பிட்ட தோடு, டூமாவில் இடம்பெற்ற சம்பவம், திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட நாடகம் என்றும் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X