2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

50 அகதிகள் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டனர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவையும் எதியோப்பியாவையும் சேர்ந்த சுமார் 50 இளம் அகதிகள், யேமன் கடற்கரையோரத்தில், வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என, குடிபெயர்தலுக்கான சர்வதேச அமைப்புத் தெரிவித்தது. அகதிகளைப் படகுகளில் ஏற்றிவந்த ஆட்கடத்தல்காரர், 120 பேரை, கடலுக்குள் தள்ளிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

குடிபெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தகவல்களின்படி, ஆபிரிக்காவைச் சேர்ந்த அகதிகள் 29 பேரின் சடலங்கள், யேமனின் தெற்குப் பகுதி மாகாணத்தின் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, 22 பேரை இன்னமும் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

"அவர்கள் அனைவரும், மிகவும் இளையவர்கள். சராசரி வயது, ஏறத்தாழ 16ஆகக் காணப்பட்டது" என்று, அவ்வமைப்பின் பேச்சாளர் எலிவியா ஹெடோன் தெரிவித்தார்.
"கரையோரத்துக்கு அருகே, அதிகாரிகள் போன்றோரைக் கண்ட கடத்தல்காரர், அகதிகளைக் கடலுக்குள் தள்ளிவிட்டார் என, இதில் தப்பியவர்கள், எங்கள் சக ஊழியர்களிடம் தெரிவித்தனர்" என, குடிபெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் யேமனுக்கான தலைவர் லாரென்ட் டி போயெக் தெரிவித்தார்.

"குறித்த கடத்தல்காரர், சோமாலியாவுக்கு ஏற்கெனவே திரும்பிவிட்டதாகவும், அதே பாதையில் யேமனுக்கு மேலும் அகதிகளைக் கொண்டு வரும் தனது வணிகத்தின் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்" என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தத்தில் உயிர்தப்பிய 27 பேருடன், அந்த அமைப்பின் அதிகாரிகள் உரையாடியதோடு, அவர்களுக்கு மேலதிகமாக 42 பேர், இதன்போது உயிர்தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர் எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .